மெல்பர்ன்: ஆஷஸ் கிரிக்கெட் போட்டி, நான்காவது டெஸ்ட்டின் நான்காவது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. இதன் விளைவாக இங்கிலாந்துக்கு இருந்த வெற்றி வாய்ப்பு பாதிக் கப்பட்டுள்ளது. நேற்றைய ஆட்டத்தில், முதல் பந்திலேயே ஆண்டர்சன் ஆட்டம் இழந்தார். இதனால் இங்கிலாந்து 491 ஓட்டங்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 194 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. 194 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையுடன் ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. ஆஸ்திரேலியா 43.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 103 எடுத்தபோது மழை பெய்தது.
தொடர்ந்து கனமழை பெய்ததால் நான்காவது நாள் ஆட்டம் அத்துடன் முடிவுக்கு வந்தது. வார்னர் 40 ஓட்டங்களுடனும் இங்கிலாந்துக்கு மழையால் பாதிப்பு ஸ்மித் 25 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். தற்போது ஆஸ்திரேலியா 61 ஓட்டங்கள் பின்தங்கிய நிலை யில் உள்ளது. நேற்று 44 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. மழையால் 46 ஓவர்கள் தடைபட்டன. இந்த 46 ஓவர் களும் வீசப்பட்டிருந்தால் இங்கி லாந்து அணி ஆஸ்திரேலி யாவின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்த வாய்ப்பு இருந்திருக்கும். அப்படி செய்திருந்தால் இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றியை நோக்கி சென்றிருக்க முடியும்.

