தப்பிய ஆர்சனல்

தப்பிய ஆர்சனல்

1 mins read

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் கிறிஸ்டல் லேசுக்கும் ஆர்சன லுக்கும் இடையிலான ஆட்டத்தில் கோல் மழை பொழிந்தது. இதில் ஆர்சனல் 3=2 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது. பிற்பாதியில் ஆர்சனலின் இரண்டாவது, மூன்றாவது கோல் களைப் போட்டு தமது குழுவின் வெற்றிக்கு வித்திட்டார் அலெக் சிஸ் சான்செஸ். ஆர்சனலுடனான சான்செ சின் ஒப்பந்தம் அடுத்த மாதத் துடன் முடிவடைகிறது. ஆனால் இதுகுறித்து தமக்கு கவலை இல்லை என்று ஆர்சனலின் நிர்வாகி ஆர்சன் வெங்கர் தெரிவித்துள்ளார். நேற்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்துடன் சேர்த்து பிரிமியர் லீக் போட்டியில் இதுவரை 810 ஆட்டங்களில் நிர்வாகியாக வெங்கர் பொறுப்பு வகித்துள்ளார். மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் முன்னாள் நிர்வாகி அலெக்ஸ் ஃபெர்குசன் படைத்த சாதனையை வெங்கர் ஈடு செய்துள்ளார்.

ஆட்டத்தின் 25வது நிமிடத்தில் கிறிஸ்டல் பேலஸின் கோல் காப்பாளர் தட்டிவிட்ட பந்தை வலைக்குள் சேர்த்தார் ஆர்சனலின் முஸ்தாஃபி. இ டை வே ளை யி ன் போ து ஆர்சனல் 1=0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. பிற்பாதி ஆட்டம் தொடங்கி நான்கு நிமிடங்களில் கிறிஸ்டல் பேலஸ் ஆட்டத்தைச் சமன் செய்தது. இந்த கோலை பேலஸின் டௌன்சன் போட்டதும் ஆர்சனல் வீரர்கள் சுதாரித்துக்கொண்டனர். வெற்றி கோலைத் தேடுவதில் அவர்கள் மும்முரம் காட்டினர். அவர்களது முயற்சி வீண்போக வில்லை. ஆட்டத்தின் 62வது, 66வது நிமிடங்களில் சான்செஸ் கோல் போட பேலஸ் திக்கு முக்காடியது.