ஐஎஸ்எல் காற்பந்து: மும்பையிடம் 4-0 எனத் தோற்ற டெல்லி

ஐஎஸ்எல் காற்பந்து: மும்பையிடம் 4-0 எனத் தோற்ற டெல்லி

1 mins read

புதுடெல்லி: இந்திய சூப்பர் லீக் காற்பந்து தொடரில் டெல்லி டைனமோஸ் அணியை 4=0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நான்காவது வெற்றியைப் பதிவு செய்தது மும்பை அணி. ஆட்டத்தில் 12வது நிமிடத்தில் லூசியன் கோயன் மும்பை அணியின் முதல் கோலைப் போட்டார். அதைத்தொடர்ந்து 43வது நிமிடத்தில் மும்பை அணி சார்பாக இன்னோர் கோல் விழ, முற்பாதி ஆட்டத்தில் அந்த அணி 2=0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து மும்பை அணி ஆதிக்கம் செலுத்த 49, 79வது நிமிடங்களிலும் அடுத்தடுத்து கோல்கள் விழுந்தன. டெல்லி அணி இறுதிவரை போராடியும் கோலடிக்க முடியவில்லை. எனவே மும்பை அணி 4=0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது.