ஸ்டீவ் ஸ்மித் சதம்; 4வது டெஸ்ட் 'டிரா'

ஸ்டீவ் ஸ்மித் சதம்; 4வது டெஸ்ட் 'டிரா'

2 mins read
8eb54f96-9909-4813-b35f-8efd98dfc34f
-

மெல்பர்ன்: ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி 'டிரா'வில் முடிந்தது. பூவா தலையா வென்று பந்தடிக்கத் தொடங்கிய ஆஸ்தி ரேலியா முதல் இன்னிங்சில் 327 ஓட்டங்களுக்கு அனைத்து விக் கெட்டுகளையும் இழந்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி அலெஸ்டர் குக்கின் அபார இரட்டை சதத்தால் 491 ஓட்டங்கள் குவித்தது. இதையடுத்து, 194 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்தி ரேலியா 2வது இன்னிங்சை தொடங்கியது. ஆஸ்திரேலியா 43.5 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 103 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை பெய்ததால் 4வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. வார்னர் 40 ஒட்டங்களுடனும் ஸ்மித் 25 ஒட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் நேற்று ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கியது. வார்னரும் ஸ்மித்தும் நிதானமாக ஓட்டங்களைக் குவித்தனர். அரை சதம் கடந்து முன்னேறிய வார்னர் 86 ஓட்டங்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த ஷான் மார்ஷ் 4 ஓட்டங்களில் ஆட்டம் இழக்க, மறுமுனையில் நிதானமாக ஆடி னார் ஸ்மித். நெருக்கடிக்கு மத்தியிலும் தனது நிதான ஆட்டத்தால் 23வது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார். ஆஸ்திரேலிய அணி 4 விக் கெட்டுகள் இழப்பிற்கு 263 ஓட்டங் கள் எடுத்து 95 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தது. இன்னும் ஆறு விக்கெட்டுகள் மீதமிருக்க ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தை முடித்துக்கொண்டது. நேரமின்மையால் ஆட்டம் 'டிரா' வில் முடிந்தது.

டெஸ்ட் போட்டியில் 23வது சதத்தைப் பதிவு செய்த மகிழ்ச்சியில் ஆஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித். படம்: ராய்ட்டர்ஸ்