'சிட்டிக்கு எதிராக போராடுவோம்'

'சிட்டிக்கு எதிராக போராடுவோம்'

1 mins read

லண்டன்: மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழுவைச் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை இல்லை என்றாலும் தமது விளையாட்டாளர் கள் அதற்காகப் போராடுவார்கள் என்று தெரிவித்துள்ளார் கிரிஸ்டல் பேலஸ் குழுவின் நிர்வாகி ராய் ஹோட்சன். இரண்டு நாட்களுக்கு முன் நடந்த ஆர்சனலுக்கு எதிரான ஆட்டத்தில் 2-3 என கிரிஸ்டல் பேலஸ் தோற்றிருந்தாலும் அவர் கள் நன்றாக விளையாடியதாக ஹோட்ஸன் சொன்னார். இன்றிரவு நடைபெறவுள்ள இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டம் ஒன்றில் சிட்டியுடன் கிரிஸ்டல் பேலஸ் மோதவிருக்கிறது.

கிரிஸ்டல் பேலசின் சொந்த மண்ணில் நடைபெறவுள்ள இப் போட்டியில் தொடர்ந்து 19வது ஆட்டத்தில் வெற்றி பெறும் நோக் குடன் சிட்டி களமிறங்குகிறது. இந்தப் போட்டி பற்றி பேசிய ராய் ஹோட்சன், "சிட்டி குழு பெரும்பாலான ஆட்டங்களில் 4 அல்லது 5 கோல்கள் போட்டு விடுகிறது. "சிட்டிக்கு எதிராகத் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டால் கோல் களை விட்டுக்கொடுக்க நேரிடும். "முயற்சி செய்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை. "ஆர்சனலுக்கு எதிராக எப்படி விளையாடினோமோ அப்படித்தான் சிட்டிக்கு எதிராகவும் விளையாடு வோம்," என்று கூறினார்.