வாகை சூடிய லிவர்பூல்; சாலாவின் அதிரடி தொடர்கிறது

வாகை சூடிய லிவர்பூல்; சாலாவின் அதிரடி தொடர்கிறது

2 mins read
d3f6625a-bd7e-412e-b95c-e35d458ad738
-

லிவர்பூல்: லெஸ்டர் சிட்டியை 2-1 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் நேற்று தோற்கடித்தது. லிவர்பூலின் நட்சத்திர வீரர் முகம்மது சாலா வின் அதிரடி ஆட்டம் தொடர் கிறது. அவர் போட்ட இரண்டு கோல்கள் லிவர்பூலின் வெற் றிக்குக் காரணமாக இருந்தன. இந்த ஆட்டம் லிவர்பூலின் ஆன்ஃபீல்ட் விளையாட்டரங் கத்தில் நடைபெற்றது. ஆட்டத்தின் 3வது நிமிடத்தில் லெஸ்டர் சிட்டியின் ஜேமி வார்டி கோல் போட்டு லிவர்பூல் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தார்.

இடைவேளையின்போது லெஸ் டர் சிட்டி 1-0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. ஆனால் பிற்பாதி ஆட்டத்தில் நிலைமை தலைகீழாக மாறியது. ஆட்டத்தின் 52வது, 76வது நிமிடங்களில் சாலா போட்ட கோல்கள் லிவர்பூல் ரசிகர்களை கொண்டாட்டத்தில் மூழ்க வைத்தன. லெஸ்டர் சிட்டியால் ஆட்டத் தைச் சமன் செய்ய முடியாமல் போக, லிவர்பூல் வெற்றி பெற்று மூன்று புள்ளிகளையும் அள்ளிக் கொண்டது. இந்த வெற்றியை அடுத்து, லிவர்பூல் லீக் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இதற்கிடையே, மான்செஸ்டர் யுனைடெட்டுக்கும் சௌத்ஹே டனுக்கும் இடையிலான ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது. சமநிலை கண்ட ஏமாற்றம் ஒருபுறம் இருக்க, தங்கள் நட்சத்திர வீரர் ரொமேலு லுக்காகு வுக்குத் தலையில் காயம் ஏற்பட்டு ஆட்டத்தைவிட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதைப் பார்த்து யுனைடெட் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

லிவர்பூலின் வெற்றி கோலைப் போடும் முகம்மது சாலா (இடது). பந்து வலைக்குள் போகாமல் இருக்க லெஸ்டர் சிட்டி கோல்காப்பாளர் எடுத்த முயற்சி பலனளிக்காமல் போனது. படம்: ராய்ட்டர்ஸ்