செல்சி கோல் வெள்ளத்தில் மூழ்கிய ஸ்டோக் சிட்டி

செல்சி கோல் வெள்ளத்தில் மூழ்கிய ஸ்டோக் சிட்டி

1 mins read
4a0d0b01-c50b-4026-88c0-d33015c50062
-

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் செல்சி அபார வெற்றி பெற்றுள்ளது. ஸ்டோக் சிட்டிக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் கோல் மழை பொழிந்து 5-0 எனும் கோல் கணக்கில் செல்சி வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து லீக் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு அது முன்னேறி உள்ளது. ஆட்டத்தின் மூன்றாவது நிமிடத்திலேயே செல்சியின் அதிரடித் தாக்குதல் ஸ்டோக் சிட்டி வீரர்களைத் திக்குமுக்காட வைத்தது. கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை செல்சியின் வில்லியன் எடுத்தார். பெனால்டி எல்லைக்குள் அவர் அனுப்பிய பந்தை நோக்கி இரு தரப்பு வீரர்களும் பாய்ந்தனர். ஸ்டோக் சிட்டியின் வீரர்களை முந்திக்கொண்டு பந்தைத் தலை யால் முட்டி வலைக்குள் அனுப்பி னார் செல்சியின் ஜெர்மன் தற்காப்பு ஆட்டக்காரர் அண்டோனி யோ ருடிகர். இது செல்சியின் கோல் வெள்ளத்தைத் தொடங்கி வைத்தது.

செல்சியின் இரண்டாவது கோலை கொண்டாடும் வில்லியன் (நடுவில்). படம்: ஏஎஃப்பி