யுனைடெட் வீரருக்குத் தடை

யுனைடெட் வீரருக்குத் தடை

1 mins read

மான்செஸ்டர்: மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழு வீரர் ஆஷ்லி யங்கிற்கு மூன்று ஆட்டங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சௌத்ஹேம்டன் குழுவிற்கு எதிராக விளையாடியபோது, யங், எதிரணி வீரர் டுசன் டாடிக்கை தாக்க முற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அவருக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனது தவற்றை யங் ஒப்புக் கொண்டாலும் மூன்று ஆட்டங் கள் தடை செய்யப்பட்டது அதி கம் என்று கூறியுள்ளார். எவர்ட்டனுக்கு எதிரான ஆட்டம் உட்பட எஃப்ஏ கிண்ண ஆட்டம், ஸ்டோக்கிற்கு எதிரான லீக் ஆட்டத்திலும் யங் விளையாடமுடியாது.