முடிவுக்கு வந்தது சிட்டியின் தொடர் வெற்றி

முடிவுக்கு வந்தது சிட்டியின் தொடர் வெற்றி

1 mins read
ad0ff357-c1e3-42a1-a68d-0dce02f0f9a2
-

லண்டன்: இங்கிலிஷ் °பிரிமியர் லீக் காற்பந்துப் பட்டியலில் முன்னி லையில் இருக்கும் மான்செஸ்டர் சிட்டியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது கிரிஸ்டல் பேலஸ் காற்பந்துக் குழு. கடந்த ஆகஸ்ட் மாதம் எவர்ட் டனிடம் 1=1 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்ட சிட்டி, கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கழித்து இப்போதுதான் பேலசிடம் 0=0 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டு உள்ளது. இவ்விரு ஆட்டங்களுக்கு இடையே நடந்த 18 ஆட் டங்களிலும் சிட்டி தொடர் வெற்றி பெற்று வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பின்னிரவு நடந்த ஆட்டத்தின் முற்பாதியில் கிரிஸ் டல் பேலஸ் குழுவின் வலுவான தற்காப்பு ஆட்டத்தால் சிட்டி குழு வால் கோல் எதுவும் போடமுடிய வில்லை. இதற்கிடையே, சிட்டியின் முக்கிய தாக்குதல் ஆட்டக்காரர் கேப்ரியல் ஜிசஸ், காயம் காரணமாக முதல் பாதி ஆட் டத்திலேயே வெளியேறினார். அவருக்குப் பதிலாக செர்ஜியோ அகுவேரோ களமிறங்கினார். அதுபோல் கடைசி நேரத்தில், கெவின் டி பிரய்னவும் காயமடைய அவரும் வெளியேறினார்.

சிட்டியின் தோல்வியில்லா பயணத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் எதிரணி உதைத்த பந்தைத் தடுத்துவிட்டார் கோல்காப்பாளர் எடர்சன். படம்: ராய்ட்டர்ஸ்