லண்டன்: மான்செஸ்டர் யுனை- டெட் டின் ஆண்டனி மார்சியல், ஜெஸ்ஸி லிங் கார்ட் ஆகிய இருவரும் போட்ட அபாரமான இரு கோல்களால் இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் நேற்று நடைபெற்ற காற் பந்தாட்டம் ஒன்றில் எவர்ட்டன் குழு 0=2 என்ற கோல் எண் ணிக் கையில் யுனைடெட்டிடம் தோல்வியைத் தழுவி யது. பிரிமியர் லீக்கில் கடந்த மூன்று ஆட்டங்களில் சம நிலை மட்டுமே காண முடிந்த மான்செஸ்டர் யுனை- டெட்டுக்கு நேற்றைய ஆட் டம் ஒரு சோதனையாகவே முதலில் தோன்றி யது. முதல் பாதி ஆட் டத்தில் சிறந்த தாக்குதல் ஆட் டத்தைத் தொடுத்த போதிலும் யுனை டெட் டால் எவர்ட்டனின் தற் காப்பு அரணை தகர்க்க முடிய வில்லை.
ஆனால், இரண்டாம் பாதி ஆட்டத்தில் முனைப் புக் காட்டிய யுனைடெட் குழு, ஆட்டத்தின் 57ஆம் நிமிடத் தில் பால் பொக்பா கொடுத்த பந்தை பதற்றமின்றி, நிதானமாக கோல் வலைக்குள் குறிபார்த்து அடித்து முதல் கோலை பெற்றுத் தந்தார் ஆண்டனி மாரிசியல். ஒரு கோல் போட்டுவிட்ட நிம்மதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்திய யுனைடெட்டுக்கு மீண்- டும் பொக்பா பந்தை தட்டிவிட, எவர்ட்டன் கோல் வலையின் வலது ஓரத்தில் மார்சியல் போட்ட கோலை போலவே, ஆட்டத்தின் 81ஆம் நிமிடத்தில் ஜெஸ்ஸி லிங்கார்ட் போட்ட இரண்டாம் கோலால் யுனைடெட் ரசிகர்களும் அதன் நிர்வாகியான ஜோசெ மொரின்யோவும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
நேற்றைய ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டின் இரண்டாவது கோலை போட்ட மகிழ்ச்சியைக் கொண்டாடும் யுனைடெட்டின் ஜெஸ்ஸி லிங்கார்ட் (சிவப்பு சட்டையுடன் இடமிருந்து இரண்டாவது). படம்: ஏஎஃப்பி

