கேப்டவுன்: சொந்த மண்ணிலேயே வெற்றிகளைக் குவித்து வரும் இந்தியா அந்நிய மண்ணில் சாதிக்க முடியுமா என சவால் விடுத்துள்ளார் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வெரோன் ஃபிலாண்டர் (படம்)கூறியுள்ளார். "இந்திய அணி அண்மை காலமாக அதிகமான போட்டி களைச் சொந்த நாட்டில்தான் விளையாடி இருக்கிறது. எனவே தென்னாப்பிரிக்க மண்ணில் அந்த அணி எந்த மாதிரி விளையாடப் போகிறது என்பதைப் பார்க்கவே சுவாரஸ்யமாக இருக்கும்.
இங்கு விளையாடுவது முற்றிலும் வித்தி யாசமானது. "எனவே இந்தத் தொடரில் எங்களைச் சமாளிப்பதற்கு இந்திய அணி எந்த அளவுக்குத் தயாராகி இருக்கிறது என்பதை அறிவதற்கு முதலாவது டெஸ்ட் முடியும் வரை காத்திருக்க வேண்டும். ஓரளவு புற்கள் உள்ள ஆடு களம், மேகமூட்டமான தட்பவெட்ப நிலை நிச்சயம் எங்களுக்குச் சாதகமாக இருக் கும். இதனால் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் கூடக் களம் இறங்க வாய்ப்பு உள்ளது. ஆனால் கடந்த இரு ஆண்டு களாக 3 வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு சுழற்பந்து வீச்சாளர் ஆகியோருடன் களம் கண்டு சாதித்து வருகிறோம்.

