வெம்பிளே: வெஸ்ட் ஹேம் காற் பந்துக் குழுவிடம் சமநிலை கண்டு ஏமாற்றமடைந்தது டோட் டன்ஹம் ஹாட்ஸ்பர். நேற்று அதிகாலை நடந்த இந்த ஆட்டத்தில் டோட்டன்ஹம் ஆதிக்கம் செலுத்தினாலும் அவர் களால் வெஸ்ட் ஹேமின் தற் காப்பைத் தாண்டி கோல் போட முடியவில்லை. வெஸ்ட் பிரோமிற்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு கோல்களைப் போட்ட ஆண்டி கரோல் காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் களமிறங்காத நிலையில், டோட்டன்ஹம்மிடம் தோற்றுவிடக் கூடாது என்று உறுதியாக இருந்த அதன் நிர்வாகி டேவிட் மோயஸ், அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்.
வெஸ்ட் ஹேமிடம் சமநிலை கண்ட டோட்டன்ஹம்
1 mins read

