மான்செஸ்டர்: பர்ன்லி காற்பந்துக் குழுவை முதல் கோல் போட விட்டுவிட்டாலும் பிற்பாதி ஆட்டத் தின்போது கோல் மழை பொழிந்து எஃப்ஏ கிண்ணக் காற்பந்தின் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது மான்செஸ்டர் சிட்டி. ஜான் ஸ்டோன்ஸ் உதைத்த பந்து தவறுதலாக பர்ன்லியின் ஆஷ்லே பர்னேஸிடம் செல்ல அவர் அதைக் கோலாக மாற்றி விட்டார். இதனால் 25வது நிமி டமே பர்ன்லி முன்னிலை பெற் றது. அதை சமன் செய்ய சிட்டிக்கு நீண்ட நேரம் பிடித்தது.
பிற்பாதி ஆட்டத்தின் போது செர்ஜியோ அகுவேரோ அடுத்தடுத்து போட்ட கோல்களால் 2-1 என முன்னிலை பெற்றது சிட்டி. 71வது நிமிடத்தில் டாவிட் சில்வா உதைத்த பந்தை லிரோய் சனி கோலாக்கினார். அடுத்து பெர்னார்டோ சில்வா இன்னோர் கோலைப் போட சிட்டியின் கோல் எண்ணிக்கை நான்கானது. 4-1 என்ற கோல் கணக்கில் பர்ன்லியை வீழ்த்திய சிட்டிக்கு இது சொந்த மண்ணில் கிடைத்த 26வது தொடர் வெற்றியாகும். இன்னோர் ஆட்டத்தில் கடந்த பருவத்தின் பிரிமியர் லீக் வெற்றி யாளரான செல்சியை நார்விச் குழு 0-0 எனச் சமநிலை செய்தது.
பர்ன்லியின் கோல் காப்பாளரைத் தாண்டி சிட்டியின் இரண்டாவது கோலைப் போட முயலும் செர்ஜியோ அகுவேரோ. படம்: ஏஎஃப்பி

