பார்சிலோனா காற்பந்துக் குழுவில் கொட்டின்யோ

பார்சிலோனா காற்பந்துக் குழுவில் கொட்டின்யோ

1 mins read
097490a5-a25f-49e2-bd15-2459be489fdc
-

லண்டன்: லிவர்பூல் நட்சத்திரமான பிரேசில் விளையாட்டாளர் பிலிப் கொட்டின்யோ (படம்) கடைசி இரண்டு ஆட்டங்களில் தனது குழுவிற்காக களமிறங்காத நிலையில், அவர் பார்சிலோனா குழுவிற்குச் செல்வதைச் சம்பந்தப்பட்ட இரு குழுக்களும் உறுதி செய்துள்ளன. கொட்டின்யோவை 142 மில்லியன் பவுண்டுகளுக்கு (S$250 மில்லியன்) பார்சிலோனா வாங்குவதாக பிரிட்டிஷ் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் காற்பந்து வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் இவர் மூன்றாவது இடம்பிடிக்கிறார்.

மேலும் கொட்டின்யோவின் விற்பனை விலையை 355 மில்லியன் பவுண்டுகளாகவும் பார்சிலோனா நிர்ணயித்துள்ளது. ஐந்தரை ஆண்டுகள் ஒப்பந்தத்தில் பார்சிலோனா குழுவிற்குச் செல்லும் கொட்டின்யோ இன்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்வார் என்றும் அதைத் தொடர்ந்து இந்த வாரத்தில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்றும் கூறப்படுகிறது. லிவர்பூலின் முக்கிய ஆட்டக்காரராக வலம் வந்த கொட்டின்யோ கடந்த 2013ஆம் ஆண்டு அக்குழுவில் சேர்ந்தார்.

"இந்த பருவம் வரை கொட்டின்யோவை லிவர்பூல் குழுவில் தக்க வைக்க நாங்கள் எங்களால் முடிந்த முயற்சிகளை செய்தோம். இப்போது அவரைப் பிரிய மனம் இல்லாமல் பிரிகிறோம்," என்றார் லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப்.

பிரேசில் விளையாட்டாளர் பிலிப் கொட்டின்யோ