உருட்டுப்பந்து: அனைத்துலகப் போட்டியில் சிங்கப்பூரர் பெர்னிஸ் லிம் முதலிடம்

உருட்டுப்பந்து: அனைத்துலகப் போட்டியில் சிங்கப்பூரர் பெர்னிஸ் லிம் முதலிடம்

1 mins read

ஸ்டாக்ஹோம்: உருட்டுப்பந்து விளையாட்டின் ஏஐகே அனைத் துலக போட்டி ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிச் சுற்றில் ஸ்வீடனை சேர்ந்த ஜெஸ்பர் ஸ்வென்சனை 240-233 என்ற எண்ணிக்கை யில் சிங்கப்பூரரான பெர்னிஸ் லிம் வெற்றி கண்டு முதலிடத்தைப் பெற்றார். இருபாலரும் பங்கேற்கும் போட்டியில் பெண்களுக்கு எட்டு 'பின்' வழங்கப்படும். அதற்கு முந்தைய சுற்றில் மலேசியரான ஸுல்கிஃப்லி ஷாலினை 226-220 என்ற எண்ணிக்கையில் லிம் வெற்றி கண்டார்.