சச்சின் மகளுக்குத் தொல்லை தந்த ஆடவர் கைது

சச்சின் மகளுக்குத் தொல்லை தந்த ஆடவர் கைது

1 mins read

இந்திய முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவுக்குத் தொலைபேசி வழியாகத் தொல்லை கொடுத்த ஆடவர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். தம்முடைய மனைவி அஞ்சலி, மகள் சாரா, மகன் அர்ஜுன் ஆகி யோருடன் மும்பையில் வசித்து வருகிறார் சச்சின். இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தேப்குமார் மைத்தி, 32, என்ற ஆடவர் சச்சி னின் வீடு, அலுவலகத் தொலை பேசி எண்களுக்குக் கடந்த ஒரு வாரத்தில் 25 முறை அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, சச்சினின் 20 வயது மகள் சாராவைத் தான் காதலிப்ப தாகக் கூறியதுடன் அவரை மணந்துகொள்ள அனுமதிக்கா விடில் அவரைக் கடத்தப்போவதா கவும் மிரட்டல் விடுத்துள்ளார். 2018-01-09 06:00:00 +0800