பிரைட்டனிடம் தோற்றது கிரிஸ்டல் பேலஸ்

பிரைட்டனிடம் தோற்றது கிரிஸ்டல் பேலஸ்

1 mins read

பிரைட்டன்: எஃப்ஏ கிண்ணக் காற்பந்தின் 3வது சுற்று ஆட்டத் தில் பிரைட்டன் காற்பந்துக் குழு விடம் கிரிஸ்டல் பேலஸ் தோற்றது. 25வது நிமிடத்தில் ஸ்டீபன் போட்ட கோலால் முன்னிலை பெற்றது பிரைட்டன். அதை 69வது நிமிடத்தில் சமன் செய்தது கிரிஸ்டல் பேலஸ். மறுமுறையும் விளையாட வேண்டுமோ என்ற சூழலில், 87வது நிமிடத்தில் விழுந்த கோல் பிரைட்டன் குழுவை 2-1 என வெற்றி பெறச் செய்தது.

மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்கிய பேலசின் முன்னாள் வீரர் முர்ரே அந்தக் கோலைப் போட்டார். இங்கிலாந்தில் முதன் முறையாக இப்போட்டியில் காணொளி உதவி நடுவர் முறை கடைப்பிடிக்கப் பட்டது. முர்ரே போட்ட கோல் அவர் கைகளில் பட்டு கோல் வலைக்குள் சென்றதாக எழுந்த சந்தேகதத்தை அடுத்து, பேலஸ் விளையாட்டாளர் கள் அந்தக் கோலை பரிசீலனை செய்யக் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து கள நடுவர், காணொளி உதவி நடுவர் குழுவோடு கலந்து பேசினார். இவர்களின் உரையாடலுக்குப் பின்னர், முர்ரே கோல் வலைக்குள் செலுத்திய பந்து கைகளில் படா மல் சென்றதாக உறுதி செய்யப் பட்டது.