புதுடெல்லி: ஊக்கமருந்து சோத னையில் சிக்கிய இந்திய கிரிக் கெட் வீரர் யூசுப் பதானுக்கு 5 மாதம் போட்டியில் பங்கேற்க இடைக்காலத் தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்திய அணியின் 'ஆல்- ரவுண்டர்' 35 வயது யூசுப் பதான் கடைசியாக 2012ல் தென்னாப் பிரிக்காவுக்கு எதிராக நடந்த 20 ஓவர் போட்டியில் விளையாடினார். தற்போது, பரோடா அணி சார்பில் உள்ளூர் போட்டியில் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் கோல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் நடந்த ஊக்கமருந்து சோதனையில், தடை செய்யப் பட்ட மருந்து உடலில் கலந் திருந்தது தெரியவந்துள்ளது. இதனால் அவருக்கு ஐந்து மாதம் போட்டியில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
யூசுப் பதான் ஐந்து மாதம் இடைநீக்கம்
1 mins read
-

