செல்சியின் வெற்றியைத் தடுத்த ஆர்சனல்

செல்சியின் வெற்றியைத் தடுத்த ஆர்சனல்

1 mins read
cdd035c6-9700-4f12-95b2-02c2efb98fbc
-

லண்டன்: லீக் கிண்ணக் காற்பந் தின் அரையிறுதி ஆட்டத்தின் முதல் சுற்றில் செல்சியை அதன் சொந்த அரங்கிலேயே கோல் போடவிடாமல் தடுத்துவிட்ட ஆர் சனல் ஆட்டத்தைக் கோல் எதுவு மின்றி சமநிலையில் முடித்தது. ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய செல்சி வெற்றியை நழுவ விட்டதற்கு ஃபேப்ரிகஸ், கிறிஸ்டென்சென் ஆகிய இரு வரும் பந்தைக் கோல்வலைக்குள் முட்டித் தள்ளாமல் வெளியே செலுத்தியதும் ஒரு காரணம்.

அதே சமயம் மோசஸ், அல் வேரோ மொராட்டா இருவரும் கோல்வலையை நோக்கி உதைத்த பந்தை ஆர்சனலின் கோல் காப்பாளர் டேவிட் ஒஸ்பினா தடுத்துவிட்டார். ஆக மொத்தம் ஆர்சனலின் தற்காப்பு ஆட்டத்தை உடைத்து செல்சியால் கோல் போடமுடிய வில்லை. அதே போல் கோல் போட கிடைத்த பொன்னான வாய்ப்பை ஆர்சனலும் தவறவிட்டுவிட்டது. ஆனால் ஆர்சனலின் தற்காப்பு ஆட்டம் மிகச்சிறப்பாக இருந்தது என்று தனது மகிழ்ச்சியை வெளிப் படுத்தினார் அதன் நிர்வாகி வெங்கர்.

ஆர்சனல் வீரர் அலெக்சிஸ் சான்செஸிடமிருந்து பந்தைத் தட்டிப் பறிக்க போராடும் செல்சி காற்பந்துக் குழுவின் கிறிஸ்டென்சென். படம்: ராய்ட்டர்ஸ்