'தோல்வியால் துவண்டுவிடுவோர் களமிறங்க தகுதியற்றவர்கள்'

'தோல்வியால் துவண்டுவிடுவோர் களமிறங்க தகுதியற்றவர்கள்'

1 mins read

செஞ்சூரியன்: இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடை யிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கேப்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் இந்தியா 72 ஓட்டங் கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத் தில் இன்று தொடங்குகிறது. "ஒரு தோல்வியிலேயே தன்னம்பிக்கை சீர்குலையும் என்றால் விளையாடுவதற்குத் தகுதியே இல்லை. தவற்றில் இருந்து பாடங்கள் கற்றுக் கொண்டு, முன்னேறும் மனப் பான்மையை உருவாக்கவேண்டும். தவறு செய்யாத எந்தவொரு கிரிக்கெட் வீரரும் இல்லை. முதல் ஆட்டம் எனக்கு சிறந்த டெஸ்ட் ஆட்டமாக அமைந்தது. அதில் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்.

"இதற்கு முன் நான் தென்னாப் பிரிக்காவில் விளையாடியது கிடையாது. அதனால் கேப்டவுன் டெஸ்ட்டில் இருந்து ஏராளமான விஷயங்களைக் கற்றுக்கொண் டேன். முதல் ஆட்டத்தில் கிடைத்த அனுபவத்தைப் பயன்படுத்தி இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது," என்று இந்திய வீரர் பும்ரா கூறியுள்ளார். இரண் டாவது டெஸ்ட் ஆட்டத்தையும் தென்னாப்பிரிக்கா வென்றால் தொடரை அது கைப்பற்றும்.