லிவர்பூல் - சிட்டி மோதல்

லிவர்பூல் - சிட்டி மோதல்

1 mins read

லிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் லிவர் பூலும் மான்செஸ்டர் சிட்டியும் நாளை இரவு மோதுகின்றன. இந்த ஆட்டம் லிவர்பூலின் ஆன்ஃபீல்ட் விளையாட்டரங் கத்தில் நடைபெறுகிறது. 22 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் 62 புள்ளிகள் குவித்து லீக் பட்டியலில் சிட்டி முன்னிலை வகிக்கிறது. லிவர்பூல் 44 புள்ளி களுடன் நான்காவது இடத்தில் உள்ளது. லீக் போட்டியில் ஆகக் கடைசியாக சிட்டி களமிறங்கிய ஆட்டத்தில் 3-1 எனும் கோல் கணக்கில் வாட்ஃபர்ட்டை அது தோற்கடித்தது.

அதே போல லிவர்பூலும் வெற்றியைச் சுவைத்தது. பர்ன் லியை 2=1 எனும் கோல் கணக்கில் அது வீழ்த்தியது. இந்நிலையில், நாளைய ஆட்டத்துக்கு முன்பாக லிவர் பூலுக்கு நல்ல செய்தி கிடைத் துள்ளது. காயம் காரணமாகத் தவித்து வந்த நட்சத்திர வீரர்கள் முகம்மது சாலாவும் டேனியல் ஸ்டரிட்ஜும் குணமடைந்து கடந்த புதன் கிழமையன்று பயிற்சியில் மீண்டும் ஈடுபடத் தொடங்கினர். அண்மையில் லிவர்பூலுக்காக கோல் மழை பொழிந்து வருகிறார் எகிப்திய தாக்குதல் ஆட்டக் காரரான சாலா.