ஜெட்டா: சவூதி அரேபியாவில் காற்பந்து ஆட்டத்தைக் காண விளையாட்டரங்கத்துக்குள் பெண்கள் முதல்முறையாக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். நேற்று முன்தினம் நடைபெற்ற சவூதி பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டத்தை நேரடியாகக் காண சவூதிப் பெண்கள் மிகுந்த ஆவலுடன் விளையாட்டரங்கத்தில் கூடினர். ஜெட்டா பர்ல் விளையாட்டரங்கத்துக்குச் சில பெண்கள் தனியாகவும் வேறு சிலர் அவர்களது குடும்பத்தாருடனும் வந்திருந்தனர். சவூதியின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் அண்மைய காலமாகப் பல சமூகச் சீர்திருத்தங்களைச் செய்து வருகிறார். அதன் விளைவாக தற்போது காற்பந்து ஆட்டங்களை விளையாட்டரங்கத்துக்குச் சென்று காண சவூதிப் பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காற்பந்து ஆட்டத்தை முதல்முறையாக நேரில் கண்டுகளித்த சவூதி மகளிர்
1 mins read

