பார்சிலோனா: ஸ்பானிய அரசர் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் காலிறுதிப் போட்டிக்கு பார்சி லோனா தகுதி பெற்றுள்ளது. காலிறுதிக்கு முந்திய ஆட்டத் திற்கான முதல் சுற்றில் பார்சிலோ னாவும் செல்டா விகோவும் தரப்புக்கு ஒரு கோல் போட்டு சமநிலை கண்டன. இதையடுத்து, இரண்டாவது சுற்று ஆட்டம் நேற்று முன்தினம் பார்சிலோனாவின் விளையாட்டரங் கத்தில் நடைபெற்றது. இதில் பார்சிலோனா 5=0 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் விளைவாக ஒட்டுமொத்த கோல் அடிப்படையில் பார்சிலோனா 6=1 எனும் கோல் கணக்கில் வென்றது. ஆட்டம் தொடங்கியதிலிருந்து பார்சிலோனா தாக்குதலில் ஈடு பட்டது. சிறிது நேரத்தில் மடை திறந்த வெள்ளம் போல் அடுத் தடுத்து கோல்களை அது போட்டது.
ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் மெஸ்ஸி அனுப்பிய பந்து செல்டா விகோவின் கோல்காப்பாளரைக் கடந்து சென்று வலையைத் தீண்டியது. முதல் 15 நிமிடங்களிலேயே இரண்டு கோல்களைப் போட்டு பார்சிலோனாவின் வெற்றிக்கு வித்திட்ட நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி (வலது). படம்: ஏஎஃப்பி

