இந்தியன் சூப்பர் லீக்: ஆறாவது வெற்றியுடன் முதலிடத்தில் சென்னை

இந்தியன் சூப்பர் லீக்: ஆறாவது வெற்றியுடன் முதலிடத்தில் சென்னை

1 mins read

சென்னை: ஐஎஸ்எல் எனும் இந்தியன் சூப்பர் லீக் காற்பந்துப் போட்டியின் 46வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்.சி. குழு புனே சிட்டி குழுவுடன் மோதியது. 1-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணி வெற்றி பெற்று தனது ஆறாவது வெற்றியைக் கொண்டாடியது. 83வது நிமிடத்தில் கரகெரி நெல்சன் ஆட்டத்தின் ஒரே கோலை அடித்தார். 10வது லீக்கில் ஆடிய சென்னை அணி, 6 வெற்றி, 2 சமநிலை, 2 தோல்வி என்று மொத்தம் 20 புள்ளிகளுடன் முதல் நிலைக்கு முன்னேறியுள்ளது.