லண்டன்: டோட்டன்ஹம் ஹாட்ஸ் பர்ஸ் குழுவும் எவர்ட்டன் குழுவும் நேற்று முன்தினம் பொருதிய இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் 4=0 என்ற கோல் எண்ணிக்கையில் டோட்டன் ஹம் அபார வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 4 கோல்களில் இரண்டை ஹேரி கேன் போட்டார். அதனுடன் அந்தக் குழுவின் பிரிமியர் லீக் சாதனை அளவில் கோல் போட்ட ஆட்டக்காரராக கேன் விளங்குகிறார். டோட்டன்ஹமின் வெம்ப்ளி அரங்கில் நடந்த இந்த ஆட்டத் தில் சன் ஹியுங் மின் ஒரு கோல் போட்டு, சொந்த மண்ணில் தொடர்ச்சியாக ஐந்தாவது ஆட்டமாக கோல் அடித்தவர் என்ற சாதனை படைத்துள்ளார். மற்றொரு கோலை கிறிஸ்டியன் எரிக்சன் போட்டு எவர்ட்டனை மோசமான தோல்வி அடையச் செய்தார். லீக் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ள டோட்டன்ஹம், 44 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ள லிவர்பூல் குழு வோடு சம அளவிலான புள்ளி களை எடுத்துள்ளது.
டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர்ஸ் அணியின் ஹேரி கேன் (நடுவில்) ஆட்டத்தின் இரண்டாவது கோலை வலைக்குள் புகுத்துகிறார். நேற்று முன்தினம் நடந்த போட்டியில் டோட்டன்ஹம் 4 கோல்களைப் போட்டு எவர்ட்டனை வீழ்த்தியது. கேன் இரண்டு கோல்களைப் போட்டு நட்சத்திர ஆட்டக்காரராக விளங்கினார். படம்: ராய்ட்டர்ஸ்

