ஜோக்கோவிச், ஃபெடரர், ஷரபோவா வெற்றித் தொடக்கம்

ஜோக்கோவிச், ஃபெடரர், ஷரபோவா வெற்றித் தொடக்கம்

1 mins read

மெல்பர்ன்: ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் போட்டியில் ரோஜர் ஃபெடரர், நோவாக் ஜோக்கோவிச், மரியா ஷரபோவா ஆகியோர் இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெற்றனர். நடப்பு வெற்றியாளரான சுவிட்சர்லாந்தின் ஃபெடரர் முதல் சுற்றில் ஸ்லோவேனிய நாட்டின் அல்யாஸ் பெடெனேவை 6=3, 6=4, 6=3 என்ற நேர் செட்களில் தோற்கடித்தார். அமெரிக்க வீரர் டோனல்ட் யங்கை 6=1, 6=2, 6=4 என்ற செட் கணக்கில் எளிதாக வெற்றி கொண்டார் செர்பியாவின் ஜோக்கோவிச். இன்னொரு சுவிஸ் வீரர் வாவ்ரிங்காவும் முதல் சுற்றில் வெற்றி பெற்றார். மகளிர் பிரிவில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா ஜெர்மனியின் டட்யானா மரியாவை 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.