'சிட்டியை விரட்டிப் பிடிப்பதில் உறுதி'

'சிட்டியை விரட்டிப் பிடிப்பதில் உறுதி'

1 mins read
96a45516-3b1c-43ff-bc9b-303abd38911b
-

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மான்செஸ்டர் சிட்டி குழுவை விரட்டிப் பிடிப்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார் இரண்டாமிடத் தில் இருக்கும் மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் பிரெஞ்சு ஆட்டக்காரர் பால் போக்பா. பருவத்தின் முதல் 22 ஆட்டங் களிலும் தோல்வியே காணாது வீறுநடை போட்டு வந்த சிட்டியை நேற்று முன்தினம் மண்ணைக் கவ்வச் செய்தது லிவர்பூல் குழு. இந்நிலையில், நேற்று அதிகாலை நடந்த தனது சொந்த அரங்கில் ஆட்டத்தில் யுனைடெட் குழு 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்டோக் சிட்டியை வீழ்த்தியது.

வெலன்சியா, மார்சியால், லுக்காகு ஆகியோர் யுனைடெட் சார்பில் கோலடித்தனர். இதையடுத்து, சிட்டிக்கும் யுனைடெட்டுக்கும் இடையிலான புள்ளி வித்தியாசம் 12ஆகக் குறைந்துள்ளது. இப்போது சிட்டி 62 புள்ளிகளுடனும் யுனைடெட் 50 புள்ளிகளுடனும் உள்ளன. இந்த வெற்றியால் சிட்டியை எட்டிப் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை இன்னும் அதிகரித்து உள்ளதாக போக்பா கூறினார்.

தான் உதைத்த பந்து ஸ்டோக் சிட்டி கோல்காப்பாளரின் தடுப்பை மீறிச் சென்றபோதும் வலையைவிட்டு விலகிச் சென்றதால் ஏமாற்றமடைந்த யுனைடெட் ஆட்டக்காரர் யுவான் மாட்டா (இடது). படம்: ராய்ட்டர்ஸ்