லண்டன்: இங்கிலிஷ் காற்பந்துப் போட்டியில் காணொளி நடுவர் முறையின் வாயிலாகப் பலன் அடைந்த முதல் குழு எனும் பெருமை லெஸ்டர் சிட்டியைச் சேரும். நேற்று அதிகாலை நடைபெற்ற இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டியின் மூன் றாவது சுற்று ஆட்டத்தில் ஃபிலீட்வூட் குழுவை 2-0 எனும் கோல் கணக்கில் லெஸ்டர் தோற்கடித்தது.
இதில் காணொளி நடுவர் முறையைப் பயன்படுத்திய பிறகே லெஸ்டர் சிட்டியின் இரண்டாவது கோல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. லெஸ்டர் சிட்டி ஆட்டத்தின் 43, 77 நிமிடங்களில் கோல் போட்டது. இரண்டு கோல்களையும் கெலேச்சி இயேனாச்சோ போட்டார். அவர் போட்ட இரண்டாவது கோலை முதலில் நடுவர் ஏற்க வில்லை. கோல் போட்டபோது அவர் 'ஆஃப்சைட்' நிலையில் இருந்ததாகக் காரணம் சொல்லப் பட்டது.

