மெல்பர்ன்: டென்னிஸ் உலகின் முன்னணி வீராங்கனைகளான முகுருசா, கோன்டா ஆகியோர் ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறினர். நேற்று நடந்த பெண்கள் 2வது சுற்று ஆட்டத்தில் 3ஆம் நிலை வீராங்கனையான முகு ருசா, தைவானைச் சேர்ந்த சுவி யிடம் 7=6, 6=4 என்ற நேர் செட்களில் தோற்றார். ஒன்பதாம் நிலை வீராங்கனை யான ஜோகனா கோண்டா, 123வது நிலை வீராங்கனையிடம் இரண்டாவது சுற்றில் தோற்று தொடரைவிட்டு வெளியேறினார். ரஷ்யாவின் மரியா ஷரபோவா 6=1, 7=6 (7=4) என்ற செட் கணக்கில் சுவெஸ்டாவை (லாட்வியா) வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற ஆட்டங்களில் 6ஆம் நிலை வீராங்கனை பிளிஸ் கோவா, சஃபரோவா ஆகியோர் வெற்றி பெற்றனர். ஆண்கள் பிரிவில் அர்ஜெண் டினாவின் லியனார்டோ மேயரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் நடால்.
டென்னிஸ்: முகுருசா தோல்வி
1 mins read

