ஐந்து போட்டிகளிலும் தோற்று அவமானப்பட்ட பாகிஸ்தான் ஐந்து போட்டிகளிலும் தோற்று அவமானப்பட்ட பாகிஸ்தான்

ஐந்து போட்டிகளிலும் தோற்று அவமானப்பட்ட பாகிஸ்தான் ஐந்து போட்டிகளிலும் தோற்று அவமானப்பட்ட பாகிஸ்தான்

1 mins read

வெலிங்டன்: ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 'ஒயிட் வாஷ்' செய்துள்ளது நியூசி லாந்து. ஏற்கெனவே 4 போட்டிகளை வென்ற நிலையில் நேற்று கடைசி, 5வது போட்டியிலும் நியூசிலாந்து அணியே வென்றது. வெலிங்டனில் நேற்று நடந்த ஆட்டத்தில் முதலில் பந்தடித்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 271 ஓட்டங்களை எடுத்தது. பின்னர் விளையாடிய பாகிஸ் தான் அணி, 49 ஓவர்களில் 256 ஓட்டங்களுக்கு அனைத்து விக் கெட்டுகளையும் இழந்தது. இதனால் பாகிஸ்தான் அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த அணிகள் மோதும் 20 ஓவர் போட்டி வரும் 22ஆம் தேதி வெலிங்டனில் தொடங்குகிறது.