ஒருநாள் தொடரில் இங்கிலாந்து முன்னிலை

ஒருநாள் தொடரில் இங்கிலாந்து முன்னிலை

1 mins read

பிரிஸ்பன்: ஆஷஸ் டெஸ்ட் கிரிக் கெட் தொடரை ஆஸ்திரேலியா விடம் இழந்த இங்கிலாந்து ஒரு நாள் தொடரில் முன்னிலை வகிக் கிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட் டியை ஏற்கெனவே வென்ற இங்கி லாந்து, நேற்று 2வது போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண் டது. இதில் பூவா தலையா வென்ற ஆஸ்திரேலிய அணி பந்தடிப்பைத் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் ஃபின்ச்=மிட்செல் மார்ஷ் இணை நிதானமாக ஆடி ஓட்டங்களைச் சேர்த்தது. சதமடித்த ஃபின்ச் 106 ஓட்டங் ஒருநாள் தொடரில் இங்கிலாந்து முன்னிலை களில் பிளங்கெட் பந்தில் ஆட்டம் இழந்தார்.

முடிவில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 270 ஓட்டங்கள் எடுத்தது. இங்கிலாந்தின் ர‌ஷித், ஜோ ரூட் தலா 2 விக்கெட்டுகளும் லியாம் பிளங்கெட், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தி னர். இதையடுத்து, 271 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு டன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் 2 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய அலெக்ஸ் ஹேல்ஸ் அரை சதம் அடித்து, 57 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய ஜோ ரூட் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டார்.