பர்ன்லிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் யுனைடெட்

பர்ன்லிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் யுனைடெட்

1 mins read

பர்ன்லி: தனது சொந்த அரங்கி லேயே வெற்றியைத் தடுத்த பர்ன்லி குழுவை பழிதீர்க்கும் முனைப்புடன் உள்ளது மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழு. பர்ன்லியின் சொந்த அரங்கில் இன்று நடக்கும் இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் அவ்விரு குழுக்களும் மோதவுள்ளன. கடந்த மாதம் இக்குழுக்கள் மோதிய ஆட்டத்தில் கடைசி நேரம் வரை யுனைடெட் இரண்டு கோல்கள் பின்தங்கியே இருந்தது. மாற்று ஆட்டக்காரராக வந்த ஜெசி லிங்கார்ட் போட்ட கோலால் 2=2 என சமநிலை செய்து தோல் வியடையாமல் தப்பித்தது மேன்யூ. ஆனால் அதன் பிறகு எவர்ட் டன், டெர்பி, ஸ்டோக் குழுக்களை வீழ்த்திய நம்பிக்கையில் உள்ள யுனைடெட், பர்ன்லிக்குப் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதுதவிர மூன்று ஆட்டங் களுக்கு தடை செய்யப்பட்டிருந்த ஆஷ்லி யங், இன்றைய ஆட்டத் தில் களம் இறங்க வாய்ப்புள்ளது. இதற்கிடையே, பர்ன்லியின் தற்காப்பு அரணை உடைத்து கோல் போட, அலெக்சிஸ் சான் செஸை நம்பியுள்ளார் யுனைடெட் நிர்வாகி மொரின்யோ. ஆர்சனலின் நட்சத்திர ஆட்டக் காரர் அலெக்சிஸ் சான்செஸ், யுனைடெட் குழுவிற்கு மாறுவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத் தாகும் நிலையில் அவரை பர்ன்லிக்கு எதிராக களமிறக்க அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரி கிறது.