லண்டன்: பிரிட்டனில் ஒன்பது மில்லியனுக்கும் மேலான மக்கள் பெரும்பாலான நேரங்களில் அல்லது எல்லா நேரங்களிலும் தனிமையில் வாடுவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. அதனை அடுத்து இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வதற்காக அந்நாட்டு பிரதமர் திரெசா மே தனிமைக்கான அமைச்சரை நியமித்துள்ளார். நவீன வாழ்வில் தனிமை என்பது ஒரு சோகமான உண்மை நிலவரம் என்று தனது அறிக்கையில் அவர் தெரிவித்தார். தனிமை என்பது உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் ஒன்று என்று கூறப்பட்டது. கலாசார அமைச்சின் விளையாட்டு மற்றும் சமுதாயத்திற்கான செயலாளர் டிரேசி கௌச் அந்தக் குழுவை வழிநடத்துவார்.
தனிமைக்கான அமைச்சரை நியமித்துள்ள பிரிட்டிஷ் பிரதமர்
1 mins read

