கோலாலம்பூர்: மலேசியாவில் இன்னும் சில மாதங்களில் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் 99 வயதாகும் திருவாட்டி மைமூன் யூசோஃப் மீண்டும் போட்டியிடவிருக்கிறார். 2008, 2013ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களிலும் கோலா திரங்கானு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த இந்த மூதாட்டி, தேர்தல் வைப்புத் தொகையான 10,000 ரிங்கிட் ($3,350) அவருக்கு கிடைத்தால் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறியுள்ளார். இரு தேர்தல்களிலும் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட அவர், வைப்புத் தொகையை இழந்துள்ளார். 92 வயதாகும் மலேசிய முன்னாள் பிரதமர் மகாதிர் முகமதுவிற்கு அடுத்து ஆக வயதான வேட்பாளராக இவர் விளங்குவார்.
மலேசிய தேர்தலில் மீண்டும் போட்டியிட விரும்பும் 99 வயது மூதாட்டி
1 mins read

