மட்ரிட்: லெவான்டே குழுவை 2=1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய வில்லா ரியால் குழு, ஸ்பானிய லா லீகா காற்பந்துத் தொடர் பட்டியலில் 34 புள்ளி களுடன் முதல் நான்கு இடங்களுக்கு முன்னேறியது. இதனால் ஏற்கெனவே 32 புள்ளிகளுடன் இருந்த ரியால் மட்ரிட் 5வது இடத்திற்குக் கீழிறங்கியது. கடந்த வாரம் நடந்த இத் தொடரின் போட்டி ஒன்றில் முதன்முறையாக ரியால் மட்ரிட்டை வில்லா ரியால் வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து தற்போது ரியால் மட்ரிட் முதல் நான்கு இடங்களில் இருந்து கீழிறங்கியதும் அதன் நிர்வாகி ஸினடின் ஸிடானுக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது. இதற்கு முன் 2000ஆம் ஆண்டில் ரியால் மட்ரிட் 5வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மட்ரிட்டை பின்னுக்குத் தள்ளிய வில்லா
1 mins read

