லண்டன்: சொந்த அரங்கில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழு வுடன் மோதிய இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டதில் சௌத்ஹேம் டன் குழு நிர்வாகி மௌரிசியோ பெலகிரினோவுக்கு மகிழ்ச்சி. இந்த ஆட்டத்தில் ஒரு புள்ளியை மட்டுமே பெற்றதால் சௌத்ஹேம்டன் குழு முதல் முறையாக 18ஆம் இடத்திற்குக் கீழிறங்கி 'ரெலிகேஷன்' நிலைக் குத் தள்ளப்பட்டது. ஆனாலும் அணியினரின் செயல்பாடு முன்னைவிட மேம் பட்டு வருவதால் பெலகிரினோ திருப்தி அடைந்துள்ளார். "ஒரு மாதத்திற்குமுன் ஸ்பர் சிடம் 5=2 என்ற கோல் கணக்கில் மோசமாகத் தோற் றோம்.
அதை ஒப்பிடும்போது இம்முறை ஆட்டம் சமனானதில் மகிழ்ச்சிதான். கடந்த நான்கு ஆட்டங்களாக வீரர்களின் செயல் பாடு மெருகேறி வருகிறது. நாங்கள் சரியான பாதையில் செல்கிறோம் என நினைக் கிறேன்," என்றார் அவர். மாறாக, கடந்த பருவத்தை இரண்டாம் நிலையுடன் முடித்த ஸ்பர்ஸ் குழுவிற்கு நேற்றைய ஆட்டத்தின் முடிவு எதிர்பார்த்த படி அமையவில்லை. "ஆட்டத்தை வெல்ல நாங் கள் இன்னும் சிறப்பாக விளை யாடவேண்டும்," என்றார் ஸ்பர்ஸ் நிர்வாகி போக்கெட்டினோ. ஆட்டத்தின் 15ஆம் நிமிடத் தில் ஸ்பர்ஸ் வீரர் டேவின்சன் சான்செஸ் போட்ட சொந்த கோலால் சௌத்ஹேம்டன் முன் னிலை பெற்றது. ஆயினும், அடுத்த மூன்றாவது நிமிடத்தில் கோலடித்து ஆட்டத்தைச் சம னுக்குக் கொண்டு வந்தார் ஹேரி கேன். இப்போது ஸ்பர்ஸ் குழு 45 புள்ளிகளுடன் பட்டியலின் ஐந்தாமிடத்தில் இருக்கிறது.

