'ஸ்போர்ட்ஸ் ஹப்' தலைமை நிர்வாகியாக முன்னாள் தேசிய நீச்சல் வீரர்

'ஸ்போர்ட்ஸ் ஹப்' தலைமை நிர்வாகியாக முன்னாள் தேசிய நீச்சல் வீரர்

1 mins read

சிங்கப்பூர்: 'சிங்கப்பூர் ஸ்போர்ட்ஸ் ஹப்'பின் புதிய தலைமை நிர்வாகியாக முன்னாள் தேசிய நீச்சல் வீரர் ஊன் ஜின் டெக் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். 1984ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் திரு ஊன் பங்குபெற்றுள்ளார். இதற்கு முன் அந்தத் தலைமைப் பொறுப்பை மனு சௌனி வகித்தார். 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து கடந்த மே மாதம் வரை அவர் 'ஸ்போர்ட்ஸ் ஹப்'பின் தலைமை நிர்வாகியாகச் செயல்பட்டார். இந்த அமைப்பு, நம் நாட்டின் பொதுத் துறை, தனியார் துறையின் பங்காளித்துவத்தின் ஆகப் பெரிய பிரதிபலிப்பு என்று திரு ஊன் தெரிவித்துள்ளார்.