மான்செஸ்டர் யுனைடெட்டில் சான்செஸ்

1 mins read

லண்டன்: ஆர்சனல் குழுவின் அலெக்சிஸ் சான்செஸ் மான்செஸ் டர் யுனைடெட் குழுவிற்கு குழு மாற்றம் பெறுகிறார். மேன்யூ அணியின் ஹென்ரிக் மிகிதார் யான் ஆர்சனல் குழுவிற்குச் செல்கிறார். இந்தக் குழு மாற்றத் தகவலை நேற்று முன்தினம் மான்செஸ்டர் யுனைடெட் குழு வெளியிட்டது. ஆர்சனல் குழுவில் மூன்றரை ஆண்டுகள் விளையாடியுள்ள சிலி நாட்டைச் சேர்ந்த தாக்குதல் ஆட்டக்காரரான 29 வயது சான் செஸ் உலகின் ஆகப் பெரிய காற்பந்துக் குழுவில் இணைவதில் பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

வரலாற்று சிறப்புமிக்க விளை யாட்டு அரங்கில் விளையாடு வதற்கும் ஜோசே மொரின்யோ வுடன் இணைந்து செயல்படுவதற் கும் கிடைத்த அரிய வாய்ப்பைத் தவறவிடுவதாக இல்லை என்று சான்செஸ் கூறியுள்ளார். மான்செஸ்டர் குழுவின் முதல் அணியில் விளையாடவிருக்கும் சிலி நாட்டைச் சேர்ந்த முதல் ஆட்டக்காரர் என்ற பெருமை சான்செஸைச் சேரும். பிரிமியர் லீக் போட்டிகளில் அதிகமான ஊதியம் பெறும் விளையாட்டாளராக சான்செஸ் விளங்குவார் என்று அறியப்படுகி றது. வரிக் கழிவுக்கு முன்னர் அவரது வார சம்பளம் 500,000 பவுண்டு ($922,000) என்று பிரிட்டிஷ் ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன.