மிர்பூர்: பங்ளாதேஷில் நடந்து வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக் கெட் தொடரின் இறுதிப் போட் டிக்கு இலங்கை அணி முன்னே றியது. ஸிம்பாப்வே மூன்றாவது அணியாக பங்குகொண்ட இந்தத் தொடரில் பங்ளாதேஷ் அணி ஏற்கெனவே இறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டது. அந்த அணிக்கு எதிரான நேற்றைய கடைசி லீக் ஆட்டத்தில் வென்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியும் என்ற இக்கட்டான நிலையில் இலங்கை அணி இருந்தது.
இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் முதலில் பந்தடித்த பங்ளாதேஷ் வீரர்கள் இலங்கை அணியினரின் பந்துகளை எதிர் கொள்ள மிகவும் சிரமப்பட்டனர். 24 ஓவர்களிலேயே அந்த அணி எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 82 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய இலங்கை அணி ஒரு விக்கெட் டையும் இழக்காமல் 11.5 ஓவர் களிலேயே இலக்கை எட்டியது. இறுதிப் போட்டி நாளை நடக்க இருக்கிறது.

