வோஸ்னியாக்கி - ஹாலெப் மோதல்

வோஸ்னியாக்கி - ஹாலெப் மோதல்

1 mins read

மெல்பர்ன்: ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் தொடரில் உலகின் முதல்நிலை ஆட்டக்காரரான ருமேனியாவின் சிமோனா ஹாலெப் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். அரையிறுதியில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை 6-3, 4-6, 9=7 என்ற செட் கணக்கில் போராடி வென்றார் ஹாலெப்.

இன்னோர் அரையிறுதியில் 2ஆம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலினா வோஸ்னியாக்கி, பெல்ஜிய ஆட்டக்காரரான எலிஸ் மெர்ட்டென்சை 6-3, 7-6 என்ற செட்களில் வென்றார். வோஸ்னியாக்கி=ஹாலெப் இடையிலான இறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ளது.