லண்டன்: சொந்த எமிரேட்ஸ் விளையாட்டரங்கில் நேற்று அதி காலை நடந்த செல்சி குழுவிற்கு எதிரான லீக் கிண்ண அரையிறுதி இரண்டாம் சுற்று ஆட்டத்தில் 2=1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வெற்றி பெற்றது. அரையிறுதி முதல் சுற்று ஆட்டம் கோலின்றி முடிந்ததால் ஒட்டுமொத்த கோல் கணக்கிலும் 2=1 என முன்னிலை பெற்று, எட்டாவது முறையாக லீக் கிண்ண இறுதிப் போட்டிக்கு ஆர்சனல் தகுதி பெற்றது.
ஆட்டத்தின் ஏழாம் நிமிடத் திலேயே ஈடன் ஹஸார்ட் அடித்த கோலால் செல்சி முன்னிலை பெற் றது. ஆனால், அடுத்த 5வது நிமி டத்திலேயே இன்னொரு செல்சி வீரரான ருடிகர் சொந்த கோல் அடிக்க, ஆட்டம் சமனுக்கு வந் தது. பிற்பாதியில் கிரானிட் ஸாக்கா போட்ட அருமையான கோல் ஆர் சனலின் வெற்றி கோலாக அமைந்தது. அலெக்சிஸ் சான்செஸ் மான் செஸ்டர் குழுவிற்கு மாறிவிட்ட தால் ஆர்சனல் குழுவில் நிலவி வந்த குழப்பமெல்லாம் தீர்ந்து இப்போது தெளிவுடன் இருப்பதாக அதன் நிர்வாகி ஆர்சன் வெங்கர் தெரிவித்துள்ளார். "சிறந்த ஆட்டக்காரரான சான்செஸை இழந்துவிட்டோம். ஆனால், குழுவில் என்ன நடக் கிறது என்பது தெரியாததால் வீரர் களால் ஆட்டத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. அவரது இழப்பை ஈடுகட்டி எழுச்சி பெற வேண்டும் என்பதை அறிந்துள் ளோம்," என்றார்.

