இறுதிச்சுற்றில் ரோஜர் ஃபெடரர்

1 mins read

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய பொது விருது டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதிச் சுற்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் தென்கொரியா வின் சுங் ஹியூனை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். உலகின் இரண்டாம் நிலை டென்னிஸ் விளையாட்டாளரான ஃபெடரர், 58வது இடத்தில் உள்ள சுங்குடன் மோதினார். காயம் காரணமாக இரண்டா வது செட் முடியும் முன்னர் ஆட்டத்திலிருந்து சுங் வெளியேறி னார். 6-1 என்று முதல் செட்டை ஃபெடரர் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் 5-2 என ஃபெடரர் முன்னிலை வகித்தபோது சுங்கிற்கு காயம் ஏற்பட்டது. அரையிறுதியில் வெற்றி பெற்றதையடுத்து ஆறா வது நிலை வீரரான குரேவே ‌ஷியாவின் மரின் சிலிச்சை இறுதிச்சுற்றில் சந்திக்கிறார்.