நடந்து வரும் 19 வயதுக்கு உட் பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் காலிறுதிச் சுற்றில் இந்தியாவும் பங்ளாதேஷும் மோதிய ஆட்டத்தில் இந்திய அணி 131 ஓட்டங்கள் வித்தியா சத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணியில் சுப்மன் கில் (86), அபிஷேக் சர்மா (50) அதிக அளவிலான ஓட்டங்களைச் சேர்த் தனர்.
வரும் 30ஆம் தேதி நடக்க விருக்கும் அரையிறுதியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடன் மோதவிருக்கிறது. இதற்கிடையில், இந்திய அணி யின் சுப்மன் கில் விளையாடும் விதம் விராத் கோஹ்லியை நினைவூட்டுவதாக மூத்த விளை யாட்டாளர்கள் கூறினர்.

