ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்தியா

ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்தியா

1 mins read
f958cf2b-2f2d-4414-ad4a-28dab9d2b023
-

வெலிங்டன்: இந்தியா, நியூசி லாந்து, பெல்ஜியம், ஜப்பான் அணி களுக்கு இடையிலான நான்கு நாடுகள் ஹாக்கி தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வரு கிறது. லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் ஜப்பான் அணியை வீழ்த்திய இந்திய அணி, இரண்டாவது சுற்று ஆட்டங் களிலும் சிறப்பாக விளையாடி வருகிறது. இந்நிலையில், இரண்டாம் சுற்றில் இந்தியா நேற்று ஜப்பான் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 4=2 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்தியா தரப்பில் ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் விவேக் பிரசாத் சாகர் கோல் போட்டார். வருண் குமார், மன்தீப் சிங், ராமன்தீப் சிங் ஆகியோரும் இந்திய அணிக்காக கோல் போட்டனர். ஜப்பான் சார்பில் சிரின் தனாக் கா 14வது நிமிடத்திலும் ஷோட்டா யமடா 43வது நிமிடத்திலும் கோல் போட்டனர்.

இறுதிப் போட்டியில் இந்தியா வும் பெல்ஜியமும் மோதுகின்றன. ஜப்பானுக்கு எதிராக கோல் போட்டு கொண்டாடும் இந்தியா. படம்: ஹாக்கி இந்தியா