இறுதிப் போட்டியில் சாய்னா

1 mins read
2197fe3b-8066-4c8b-ad66-335937779f51
-

ஜகார்த்தா: இந்தோனீசிய மாஸ் டர்ஸ் பூப்பந்துப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான சாய்னா நேவால் தகுதி பெற்று உள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவுக் கான அரையிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை சாய்னா நேவாலை முன்னாள் உலக வெற்றியாளரான தாய் லாந்தின் ரட்சனோக் இன்டோ டனன் எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரட்சனோக்கை 21-19, 21-19 எனும் நேர் செட்களில் போராடி வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார் சாய்னா நேவால். போட்டியின் தொடக்கத்தில் இருந்து சாய்னாவுக்குக் கடும் நெருக்கடி தரும் வகையில் ரட்சனோக் விளையாடி வந்தார். ஆனால், தமது அனுப வத்தைப் பயன்படுத்தி ரட்சனோக்கைப் பின்னுக்குத் தள்ளி 13-8 எனும் புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்று அந்த செட்டைக் கைப்பற்றினார் சாய்னா.

வெற்றிக் களிப்பில் சாய்னா நேவால். படம்: ஏஎஃப்பி