கோஹ்லி: மிக முக்கியமான வெற்றி

கோஹ்லி: மிக முக்கியமான வெற்றி

1 mins read
bf860e36-d34f-42b1-853b-8253dc21eda8
-

ஜோகனஸ்பர்க்: தென்னாப்பிரிக்க கிரிக் கெட் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கிட்டிய வெற்றியை மிக முக்கியமானதாகக் கருதுகிறோம் என்று இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி (படம்) தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள இந்திய அணி முதலிரு போட்டிகளிலும் தோற்று டெஸ்ட் தொடரை இழந்தது. இருந்தபோதும் ஜோகனஸ்பர்க் நியூ வாண்டரர்ஸ் அரங்கில் நடந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணி 63 ஓட்ட வித்தியாசத்தில் வென்று எழுச்சி கண்டது. இந்த அரங்கில் இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி இரண்டில் வெற்றியும் மூன்றில் 'டிரா'வும் கண்டுள்ளது.

முதல் இன்னிங்சில் இந்தியா 187 ஓட்டங்களையும் தென்னாப்பிரிக்கா 194 ஓட்டங்களையும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 247 ஓட்டங்களை எடுக்க, தென்னாப்பிரிக்க அணிக்கு 241 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியின் டீன் எல்கர் = ஹசிம் ஆம்லா இணை 2வது விக்கெட்டுக்கு 119 ஓட் டங்களைச் சேர்த்தது. ஆயினும், அணி யின் எண்ணிக்கை 124ஆக இருந்தபோது 52 ஓட்டங்களை எடுத்திருந்த ஆம்லாவை இஷாந்த் சர்மா வெளியேற்ற, தென்னாப் பிரிக்க அணியின் சரிவு ஆரம்பமானது. குவின்டன் டி காக், பெலுக்வாயோ, ரபாடா, மோர்கல் ஆகியோர் ஓட்டமேதும் எடுக்காமலே வெளியேற, அந்த அணி 177 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. முகம்மது ஷமி ஐந்து விக்கெட்டுகளைச் சாய்த்தார்.