20வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ஃபெடரர்

1 mins read
d1dc55dd-9420-4b72-b9ab-c64d44eccabf
-

மெல்பர்ன்: உலகின் இரண்டாம் நிலை டென்னிஸ் வீரரான சுவிட் சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டத்தைக் கைப்பற்றி உள்ளார். இதற்குமுன் 2004, 2006, 2007, 2010, 2017 ஆகிய ஆண்டு களில் ஃபெடரர் ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டத்தை வென்றுள்ளார். ஒட்டுமொத்தத்தில், அவருக்கு இது 20வது கிராண்ட் ஸ்லாம் பட்டம். இறுதிப் போட்டியில் அவர் குரோவே‌ஷிய ஆட்டக்காரர் மரின் சிலிச்சை 6-2, 6-7, 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் போராடி வீழ்த்தினார்.

"மிகவும் மகிழ்ச்சியாக இருக் கிறேன். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டிலும் வென் றதை என்னால் நம்ப முடிய வில்லை," என்று போட்டி முடிந்த பின் கூறினார் ஃபெடரர். இறுதிப் போட்டிக்கு முன்னேறி யதால் தரவரிசையில் மூன்றாம் இடத்திற்கு உயர்ந்த சிலிச்சிற்கும் அவர் பாராட்டுத் தெரிவித்தார். "உலகம் முழுவதும் ஏராளமான வர்களுக்கு ஃபெடரர் ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார்," என்று புகழாரம் சூட்டினார் 'டென்னிஸ் ஆஸ்திரேலியா' தலைவர் ஜேன் ஹர்ட்லிக்கா.

ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டத்தை வென்ற மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர்விடும் 36 வயதான ரோஜர் ஃபெடரர். படம்: ஏஎஃப்பி