ரொனால்டோவை முந்திய மெஸ்ஸி

ரொனால்டோவை முந்திய மெஸ்ஸி

1 mins read

பார்சிலோனா: ஸ்பானிய லீக் காற்பந்தில் 'ஃபிரீ கிக்' முறையில் அதிக கோலடித்தவர்கள் வரிசை யில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி. ஆலவெஸ் குழுவிற்கு எதிராக நேற்று அதிகாலை நடந்த லா லீகா ஆட்டத்தில் லூவிஸ் சுவாரெஸ், மெஸ்ஸி ஆகியோர் கோலடிக்க, பார்சிலோனா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தப் பருவத்தில் இன்னும் ஒரு தோல்வியைக்கூட சந்திக்காது 57 புள்ளிகளுடன் அக்குழு முதல் இடத்தை உறுதியாகப் பற்றிக் கொண்டுள்ளது.

இந்தப் போட்டியில் கோலடித் ததன் மூலம் 'ஃபிரீ கிக்' முறையில் மெஸ்ஸி அடித்துள்ள கோல்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்தது. கிறிஸ்டியானோ ரொனால்டோ இதுவரை 'ஃபிரீ கிக்' முறையில் 20 கோல்களை அடித்திருக்கிறார்.