நான்கு கிண்ணங்களை நோக்கி சிட்டி

1 mins read
228eecb7-f09c-46e8-b302-f21e353c46b4
-

கார்டிஃப்: இங்கிலிஷ் பிரிமியர் லீக், எஃப்ஏ கிண்ணம், லீக் கிண்ணம், சாம்பியன்ஸ் லீக் என இந்தப் பருவத்தில் நான்கு கிண் ணங்களைக் கைப்பற்றும் வகையில் மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழு வீறுநடை போட்டு வருகிறது. கெவின் டி பிரய்ன, ரஹீம் ஸ்டெர்லிங் ஆகியோர் ஆளுக்கு ஒரு கோலடிக்க, நேற்று முன் தினம் நடந்த எஃப்ஏ கிண்ண ஆட்டத்தில் 2=0 என்ற கணக்கில் கார்டிஃப் சிட்டியை வீழ்த்தியது மேன்சிட்டி.

இந்த வெற்றியின் மூலம் அக்குழு காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கு முன்னேறியது. முற்பாதி ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் மேன்சிட்டி வீரர் லெரோய் சானே காயமடைந்து வெளியேற, அவருக்குப் பதிலாக செர்ஜியோ அகுவேரோ களம் கண்டார். சானே காயமடையக் காரண மாக இருந்து மஞ்சள் அட்டை பெற்ற கார்டிஃப் சிட்டி ஆட்டக்காரர் ஜோ பென்னட், பிற்பாதியிலும் ஒரு மஞ்சள் அட்டை பெற்றார். இதனால் அவர் திடலைவிட்டு வெளியேற்றப்பட்டார். சானே கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்கு விளையாட முடியாமல் போகலாம் என்று மேன்சிட்டி நிர்வாகி கார்டியோலா தெரிவித்து உள்ளார்.

மான்செஸ்டர் சிட்டி குழுவின் ரஹீம் ஸ்டெர்லிங் (எண் 7) தலையால் முட்டி வலைக்கு அனுப்பிய பந்தைத் தடுக்க முயன்ற கார்டிஃப் சிட்டி கோல் காப்பாளர் நீல் ஈதரிட்ஜின் எண்ணம் ஈடேறவில்லை. படம்: ஏஎஃப்பி