ஆர்சனலுக்கு மாறவிருக்கும் காற்பந்து ஆட்டக்காரர்

ஆர்சனலுக்கு மாறவிருக்கும் காற்பந்து ஆட்டக்காரர்

1 mins read
2517a8b8-17b7-4cc3-8ad4-43fcea1f687c
-

லண்டன்: ஜெர்மனியின் பொருஸியா டோட்ர்மண்ட் காற்பந்துக் குழுவிற்காக விளையாடி வரும் கபோன் நாட்டு தாக்குதல் ஆட்டக்காரர் பியர் எமரிக் ஒபமெயாங், 28 (படம்), ஆர்சனல் குழுவிற்கு மாறுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில், வேறு ஓர் ஆட்டக்காரரை தனக்குத் தந்தால் மட்டுமே ஒபமெயாங்கின் இடமாற்றம் சாத்தியமாகும் என்று டோர்ட்மண்ட் வலியுறுத்தி வருவதாக பிபிசி செய்தி கூறுகிறது.

ஆர்சனல் அதற்கு ஒப்புக்கொண்டால் பிரெஞ்சு ஆட்டக்காரரான ஒலிவியர் ஜிரூட், டோர்ட்மண்ட் குழுவிற்குச் செல்ல வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஒபமெயாங்கை ஒப்பந்தம் செய்ய ஆர்சனல் ஏற்கெனவே இருமுறை முயன்றது. இம்முறை அவருக்காக 60 மில்லியன் பவுண்டு (S$110 மி.) தர ஆர்சனல் முன்வந்ததை அடுத்து டோர்ட்மண்ட் இறங்கி வந்துள்ளது. படம்: ஏஎஃப்பி